மோடி பதவியேற்பு விழா: ரஜினியை அடுத்து கமல்ஹாசனுக்கும் அழைப்பு!

டெல்லியில் மே 30ம் தேதி நடைபெறும் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஆனால் மோடியின் அரசை கடுமையாக விமர்சனம் செய்த கமல்ஹாசன் இந்த விழாவில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது

முன்னதாக டெல்லியில் மே 30ம் தேதி நடைபெறும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது என்பதும் அவர் இந்த விழாவில் கலந்து கொள்வது உறுதி என்றும் செய்திகள் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply