மோடி-ஜி ஜிங்பிங் பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகிய இருவரும் நேற்றைய இரவு விருந்துக்கு பின் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின்போது இந்தியா, சீனா இடையே உள்ள தேசிய அளவிலான பிரச்னைகள், சீனா மாமல்லபுரம் இடையே இருந்த வர்த்தக தொடர்பு குறித்தும் பேசப்பட்டதாகவும், இருநாடுகளிடையே நிலவும் பிரச்னைகள் தொடர்பாகவும், அதனை சரி செய்வது தொடர்பாகவும் விரிவாக பேசப்பட்டதாகவும் வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே செய்தியாலர்களிடம் தெரிவித்தார்.

மேலும் தமிழகம் சிறப்பான வரவேற்பை அளித்துள்ளது என்றும், குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் இருந்து மாமல்லபுரம் வரை அனைத்தும் மிக சிறப்பாக இருந்ததாக சீன அதிபர் தெரிவித்ததாகவும், மத்திய, மாநில அரசின் ஏற்பாடுகள் மிக சிறப்பாக இருந்ததாக மனதார சீன அதிபர் பாராட்டியதாகவும் வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே தெரிவித்துள்ளார்.

Leave a Reply