மோடி-அபிநந்தன் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவு செய்த எம்.எல்.ஏவுக்கு நோட்டீஸ்

மோடி-அபிநந்தன் புகைப்படத்தை ஃபேஸ்புக்கில் பதிவு செய்த எம்.எல்.ஏவுக்கு நோட்டீஸ்

பாகிஸ்தானில் சிக்கிய இந்திய வீரர் அபிநந்தன் சமீபத்தில் இந்திய அரசின் ஆக்கபூர்வமான நடவடிக்கையால் மீட்கப்பட்டார். இருப்பினும் இந்த விவகாரத்தை தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்த கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது

இந்த நிலையில் டெல்லி விஸ்வாஸ் நகர் எம்.எல்.ஏ.,வான ஓ.பி.சர்மா பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் அபிநந்தன் இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது இந்த புகைப்படத்தை நீக்குமாறு பேஸ்புக் நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மேலும் இதற்கான விளக்கம் கேட்டு ஓ.பி.சர்மாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது

இந்திய ராணுவ வீர்ர்களின் தன்னலமற்ற உயிர்த்தியாகத்தையும் வீரத்தையும் தேர்தல் அரசியலுக்காக அரசியல் கட்சிகள் பயன்படுத்த கூடாது என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது

Leave a Reply