shadow

மோடியை வீழ்த்த இணைந்த இரண்டு முதல்வர்கள்

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் உள்பட பல கட்சிகள் கூட்டணி அமைத்து ஒன்று சேர்ந்து வரும் நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களை, ஆந்திர முதல்வர்சந்திரபாபு நாயுடு சந்தித்து பாஜகவை வீழ்த்த ஒன்றிணையவுள்ளதாக உறுதி செய்துள்ளனர்.

சமீபத்தில் டெல்லியில் இந்த இரு முதல்வர்களும் சந்தித்து பேசியதாகாவும், தேர்தலின்போது இருவரும் கைகோர்த்து பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்திருந்தபோதிலும் சந்திப்பின் நோக்கம் குறித்து அவர் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

பாஜக, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுக்கும் எதிரான தலைவர்களுடன் சந்திரபாபு நாயுடு பேச்சுநடத்தி வருவதால் 3வது அணி அமைக்க அவர் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *