மோடியின் திட்டத்திற்கு திடீர் ஆதரவு தெரிவித்த திருமாவளவன்!

மோடியின் திட்டத்திற்கு திடீர் ஆதரவு தெரிவித்த திருமாவளவன்!

மத்தியில் ஆளும் பாஜகவும், பிரதமர் மோடியும் என்ன செய்தாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் எதிர்க்கட்சிகள் மத்தியில் மோடியின் சமீபத்திய திட்டம் ஒன்றுக்கு திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

மோடியின் திட்டங்களில் ஒன்று ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதுதான். நாடாளுமன்றத்திற்கும் அனைத்து மாநில சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது அவரது கனவுகளில் ஒன்று

இந்த திட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கும், சட்டமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது எந்த அளவிற்கு சாத்தியம் என தெரியவில்லை. ஆனால் அப்படி நடந்தால் நல்லதுதான் என்றும், நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்தின் செலவை குறைக்கும், நேரத்தையும் குறைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply