மொழி விவகாரத்தில் யாரும் தலையிட உரிமை கிடையாது: கனிமொழி எம்பி

மொழி விவகாரத்தில் யாரும் தலையிட உரிமை கிடையாது என தி.மு.க. எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் அமலிநகருக்கு சென்ற தூத்துக்குடி எம்.பி, கனிமொழி மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெனிபர் சந்திரன் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மொழி குறித்து குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு சென்னை நிகழ்ச்சியில் பேசியதற்கு பதிலளித்தார். மக்கள் தன்னுடைய மொழியை தக்கவைத்துக்கொள்வது, இன்னொரு மொழியை கற்றுக்கொள்வது அந்தந்த மக்களின் உரிமை என குறிப்பிட்டார்.

அதேபோல் ஒரு மொழியை மக்கள் படிக்க அரசியல் கட்சிகள் தடையாக இருக்கக்கூடாது என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply