மைக்ரோசாஃப்ட் வேர்டு-இல் உள்ள இந்த அற்புதங்கள் யாருக்காவது தெரியுமா?

எம்.எஸ். ஆபீஸின் ஒரு பகுதியான மைக்ரோசாஃப்ட் வேர்டு-இல் நூற்றுக்கணக்கான ஆப்சன்கள் கொட்டி கிடக்கின்றன. பலருக்கு Row மற்றும் Column குறித்துதான் இந்த மைக்ரோசாஃப்ட் எக்ஸெல்-இல் தெரியும். தற்போது சில அற்புதமான ஆப்சன்களை பார்ப்போமா!

* மைக்ரோசாஃப்ட் வேர்டு-இல் மூன்று முறை — என்பதை டைப் செய்து எண்டர் பட்டனை தட்டினால் ஒரு லைன் (__________________________)  கிடைத்துவிடும். நீங்கள் மெனக்கெட்டு ஒரு லைனை டைப் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

* அதேபோல் மூன்று முறை === என்பதை டைப் செய்துவிட்டு எண்டர் பட்டனை தட்டினால் ஒரு டபுள் லைன் கிடைக்கும் (===================================)

* மேலும் ~~~~ என்ற பட்டனை மூன்று முறை டைப் செய்துவிட்டு பின் எண்டர் பட்டனை தட்டினால் அதே வடிவில் ஒரு லைன் கிடைக்கும் (~~~~~~~~~~~~~~~~~~~)

* அதேபோல் ### ஹேஷ்டேக் பட்டனை மூன்று முறை தட்டிவிட்டு பின்னர் எண்டர் பட்டனை தட்டினால் போல்ட் டபுள் லைன் கிடைக்கும்

* மேலும் மூன்று முறை *** ஸ்டார் பட்டனை தட்டிவிட்டு பின்னர் எண்டர் பட்டனை தட்டினால் உங்களுக்கு கிடைப்பது டாட்டட் லைன் (……………………………………………………….)

இதுபோன்ற இன்னும் பல மைக்ரோசாஃப்ட் வேர்டு அற்புதங்களை வரும் நாட்களில் பார்ப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *