மே 2ஆம் வெற்றி கொண்டாட்டத்திற்கு தடை: தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அன்றைய தினம் வெற்றி பெற்ற அரசியல் கட்சிகள் கொண்டாட்டங்கள் நடத்த தடைவிதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

மே இரண்டாம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவர உள்ளதை அடுத்து வெற்றி பெற்ற கட்சிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வரும் என்பது வழக்கமான ஒன்று
ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அரசியல் கட்சிகளின் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது

இந்த தடையை மீறும் நபர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது

Leave a Reply