மேலும் ஒரு வாரம் (ஜூன் 21 வரை) ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரை?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் (ஜூன் 21 வரை) ஊரடங்கை நீட்டிக்க உயர் அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

தொற்று அதிகமுள்ள மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்புள்ளதாக தகவல். புதுவையில் டாஸ்மாக் கடைகள் திறந்துவிட்டதால் தமிழகத்தில் இருந்து மது வாங்க புதுவை செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து தமிழகத்தின் சில பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் புதிய தளர்வுகள் குறித்து நாளை அறிவிப்பு வெளியாகும் என தகவல்.