மேற்குவங்க தேர்தலில் வன்முறை: வாக்காளர் ஒருவர் உயிரிழப்பு

மேற்குவங்க தேர்தலில் வன்முறை: வாக்காளர் ஒருவர் உயிரிழப்பு

இன்று மேற்குவங்கம் உள்பட பல மாநிலங்களில் மூன்றாம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணி முதல் வாக்காளர்கள் வரிசையில் நின்று தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட மோதலில் சிக்கி வாக்காளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள முர்ஷிதாபாத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும் 7 பேர் படுகாயம் அடைந்ததாகவும் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

Leave a Reply

Your email address will not be published.