மேட்டூர் அணையில் மலர் தூவி தண்ணீரை திறந்துவிட்ட முதல்வர்

மேட்டூர் அணையின் உயரம் 100 அடியை தாண்டி 101 அடியாக இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மேட்டூர் அணையை திறந்து வைத்தார்

மேட்டூர் அணையை திறந்து வைத்த பழனிச்சாமி அணை திறக்கப்பட்டவுடன் மலர்களை தூவினார். முதல்கட்டமாக மேட்டூர் அணையில் இருந்து நூறு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுவதாகவும், இந்த அளவு படிப்படியாக மேலும் அதிகரிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் இந்த ஆண்டு மேட்டூர் அணையை திறக்க வேண்டும் என கடந்த பல மாதங்களாக விவசாயிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இன்று முதல்வர் தொடங்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply