மேட்டூர் அணைக்கான நீர் வரத்து 2.20 லட்சம் கன அடியாக அதிகரிக்கும் – ஜல்சக்தி அமைச்சகம் எச்சரிக்கை

காவிரி கரையோரங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மத்திய ஜல்சக்தி அமைச்சகம் எச்சரிக்கை அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளதால் காவிரி கரையோர மக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று மாலை 2.20 லட்சம் கன அடியாக அதிகரிக்கும் என ஜல்சக்தி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனையடுத்து உடனடியாக காவிரி கரையோர மக்களை அப்புறப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜல்சக்தி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் தண்ணீர் திறப்பு அதிகரிக்கும் என்பதால் கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியதை அடுத்து தமிழக தலைமைச் செயலாளர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். மேட்டூருக்கு வரும் நீரின் அளவு நாளை ஒரு லட்சம் கன அடியாக குறையும் என ஜல்சக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply