மேக்ஸ்வெல்: பஞ்சாப் அணியின் கேதார் ஜாதவ், 12 பந்துகளில் 7 ரன்கள்

நேற்றைய சென்னை அணியின் கேதார் ஜாதவ் 12 பந்துகளுக்கு 7 ரன்கள் எடுத்ததை இன்னும் யாராலும் மறக்கவே முடியாது

இந்த நிலையில் அதே தவறை இன்று பஞ்சாப் அணியின் மாக்ஸ்வல் செய்துள்ளார். அவர் 202 என்ற இலக்கை நோக்கி விளையாடிக் கொண்டிருந்த நிலையில் 12 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட் ஆகியுள்ளது பஞ்சாப் அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

முன்னதாக ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்துள்ளது என்பதும் பெயர்ஸ்டோ 97 ரன்கள் அடித்து உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

கேதார் ஜாதவ் போலவே கட்டை போட்டு டெஸ்ட் போட்டி போல் விளையாடிய மாக்ஸ்வெல்லை கேதார் ஜாதவ்வுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.