shadow

மேகதாது விவகாரத்தில் அணை கட்டுவதற்கு எதிராக தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அணை காட்டியே தீருவோம் என கர்நாடக அரசு உறுதியாக உள்ளது. நேற்று இதனை தொடர்ந்து தஞ்சாவூரில் விவசாயிகள் உண்ணாவிரத போராட்டமும் இருந்தனர்.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு அனைத்துக்கட்சிக்குழு! இன்று டெல்லியில் ஒன்றிய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்திக்கிறது. சந்தித்து மேகதாது விவகாரம் முழுமையாக பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கு ஒரு முற்றுபுள்ளி கிடைக்குமா என்பதையும் பொறுத்திருந்து பாப்போம்.

ஆனால் அணை கட்ட அனுமதிக்கக்கோரி பிரதமர் மோடியை நேரில் சந்திக்கிறார் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா. இதனால் இரண்டு மாநிலங்களுக்கு இடையே உள்ள விரிசல் நீடித்து வரும் சூழல் உள்ளது.