மெலனியா டிரம்ப் பயணம் செய்த விமானத்தில் திடீர் புகை: பெரும் பரபரப்பு

மெலனியா டிரம்ப் பயணம் செய்த விமானத்தில் திடீர் புகை: பெரும் பரபரப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களது மனைவி மெலனியா டிரம்ப் நேற்று பிலடெல்பியா மாகாணம் புறப்பட்டு செல்வதற்காக ஆன்ட்ரு ஏர்பேஸ் விமானத்தில் ஏறினார்.

சிறிது நேரத்தில் விமானத்தின் கேபின் அறையில் இருந்து திடீரென புகை வெளியானது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த விமானம் மீண்டும் ஆன்ட்ரு ஏர்பேஸ் விமான தளத்தை வந்தடைந்தது. விமானத்தில் இருந்து மெலனியா பத்திரமாக கீழே இறங்கினார்.

இது தொடர்பாக, வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் கூறுகையில், விமானத்தில் பயணித்தவர்கள் யாருக்கும் எந்த சேதமும் இல்லை. இயந்திர கோளாறால் புகை ஏற்பட்டது என தெரிவித்தார்.

மெலினியா டிரம்ப் சென்ற விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதை அறிந்த டொனால்ட் டிரம்ப், அவருடன் தொலைபேசியில் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் சென்ற விமானத்தில் திடீரென புகை ஏற்பட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #MelaniaTrump

Leave a Reply