‘மெர்சல்’ படத்திற்கு நாளை தடை வருமா? பரபரப்பு தகவல்

‘மெர்சல்’ படத்திற்கு நாளை தடை வருமா? பரபரப்பு தகவல்

இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் நல்ல வசூலுடன் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த படத்தின் வெற்றிக்கு இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களே காரணம் என்று கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ‘மெர்சல்’ படத்தின் சென்சாரை திரும்ப பெற வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று சமீபத்தில் தாக்கல் செய்யபப்ட்டது. அஸ்வத்தாமன் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்த இந்த வழக்கின் விசாரணை நாளை நடைபெறுகிறது.

நாளை நடைபெறும் விசாரணையில் ‘மெர்சல்’ சென்சார் குறித்து அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்படுமா? என்பதே பலரது கேள்வியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.