மெர்சல்’ டைட்டில் வழக்கில் கிடைத்த மெர்சலான தீர்ப்பு

மெர்சல்’ டைட்டில் வழக்கில் கிடைத்த மெர்சலான தீர்ப்பு

இளையதளபதி விஜய் நடித்த ‘மெர்சல்’ டைட்டில் குறித்த வழக்கின் தீர்ப்பு சற்றுமுன்னர் வெளிவந்துள்ள நிலையில் இந்த டைட்டிலுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படுவதோடு, மெர்சல் படக்குழுவினர் இந்த டைட்டிலை பயன்படுத்த எந்த தடையும் இல்லை என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த டைட்டிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாக்கல் செய்த ராஜேந்திரன் என்பவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த தீர்ப்பு ‘மெர்சல்’ படக்குழுவினர்களுக்கு மட்டுமின்றி கோடிக்கணக்கான விஜய் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. ‘மெர்சல் டைட்டிலுக்கான தடை நீங்கியதை அடுத்து சென்சார், புரமோஷன் மற்றும் ரிலீஸ் பணிகள் துரிதமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply