shadow

‘மெர்சல்’ டீசர் ரிலீஸ் எப்போது? 10ஆம் தேதி அறிவிக்கப்படுமா?

இளையதளபதி விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் உள்பட பலர் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதியை அறிவிக்க கோரி ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ‘மெர்சல்’ டீசர் குறித்த அறிவிப்பு வரும் 10ஆம் தேதி வர வாய்ப்பு இருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தேனாண்டாள் நிறுவனத்தின் சி.இ.ஓ தனது டுவிட்டரில் ‘மெர்சல்’ டீசர் அறிவிப்பு மிக விரைவில் என்று பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளிக்கு வெளியாகவுள்ள இந்த படத்தின் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply