மெரீனா கடற்கரையில் மழை நீர்! இளைஞர்கள் கொண்டாட்டம்

மெரீனா கடற்கரையில் மழை நீர்! இளைஞர்கள் கொண்டாட்டம்

கட்ந்த ஐந்து நாட்களாக சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதற்கு மெரீனா கடற்கரையும் தப்பவில்லை.

கடல் எது, கரை எது என்று சொல்ல முடியாத அளவில் காமராஜர் சாலை வரை தண்ணீர் உள்ளது. இந்த நிலையில் மெரீனா கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடற்கரையில் தேங்கியுள்ள தண்ணீரில் குளித்து கொண்டாடி வருகின்றனர். இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களும் மழைநீரில் ஓட்டி இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

பொதுவாக மழை பெய்தால் மெரீனாவில் கூட்டம் இருக்காது. ஆனால் நேற்று காலை முதல் மாலை வரை உள்ளூர் மக்கள் மெரீனாவுக்கு வந்து கடலும், கடற்கரையும் இணைந்த காட்சியை கண்டு களித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.