மெரினா புரட்சியில் ஒரு தலைவர் உருவாகாதது ஏன்? இயக்குனர் பொன்வண்ணன்

மெரினா புரட்சி, ஒரு தலைவரை அடையாளம் காட்டியிருந்தால், தமிழகத்தின் தலையெழுத்து மாறியிருக்கும் என நடிகர் பொன்வண்ணன் தெரிவித்துள்ளார்.

ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற போராட்டத்தை மையப்படுத்தி ‘மெரினா புரட்சி’ என்ற பெயரில் படம் எடுக்கப்பட்டுள்ளது. சென்னை வடபழனியில் நடைபெற்ற படத்தின் அறிமுக விழாவில், நடிகரும் இயக்குனருமான பொன்வண்ணன் பேசியதாவது:

மெரினா போராட்டத்தை போல், ஒரு போராட்டத்தை தாம் பார்த்தது இல்லை என்றும், இனிமேல், நாம் பார்க்க போவதும் இல்லை. ஆனால் இந்த புரட்சி போராட்டத்தில் ஒரு தலைவர் அடையாளம் காட்டப்படாதது ஒரு குறையாகவே கருதப்படுகிறது. அப்படி ஒரு தலைவர் உருவாகியிருந்தால் தமிழகத்தின் தலையெழுத்து மாறியிருக்கும் என தெரிவித்தார்.

Leave a Reply