மெடலை உடைக்க முடியாது குருநாதா! பிக்பாஸிடம் வாக்குவாதம் செய்த சாண்டி

மெடலை உடைக்க முடியாது குருநாதா! பிக்பாஸிடம் வாக்குவாதம் செய்த சாண்டி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இன்று தர்ஷன் வெளியேற போவதாக கமல் அறிவித்ததும் மீதியுள்ள நால்வரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

குறிப்பாக சாண்டி இந்த முடிவை ஏற்று கொள்ள மறுத்தார். ஒவ்வொரு போட்டியாளரும் வெளியே போகும்போது மெடலை உடைப்பது வழக்கம். அவ்வாறு மெடலை உடைக்க தர்ஷன் தயாரானபோது, பிக்பாஸிடம் சாண்டி, ‘குருநாதா மெடலை உடைக்க முடியாது குருநாதா!, மெடல் அவனுக்கு தான் சொந்தம் என்று இத்தனை நாள் நாங்கள் நினைத்திருந்தோம் என்று கூறி பிக்பாஸிடம் வாதாடினார்.

இந்த நிலையில் பிக்பாஸ் தர்ஷனிடம்’ தர்ஷன் நீங்கள் மெடலை உடைக்கத்தான் வேண்டும்’ என்று கூற வேறு வழியின்றி தர்ஷனை அதனை உடைத்தார். பின்னர் செல்பி எடுத்து கொண்டு தர்ஷன் அனைவரிடமும் விடை பெற்று கொண்டு வெளியேறினார். இதுவரை இல்லாத வகையில் வெளியேறும் போட்டியாளர் தர்ஷன் ஒரு சொட்டு கண்ணீர் கூட விடாமல் சிரித்து கொண்டே வெளியேறினார்

Leave a Reply