மூளை ஆபரேசனை வேறு நபருக்கு மாற்றி செய்த டாக்டர் சஸ்பெண்ட்

மூளை ஆபரேசனை வேறு நபருக்கு மாற்றி செய்த டாக்டர் சஸ்பெண்ட்

கென்யா மருத்துவமனையில் கடந்த ஞாயிறு அன்று இரண்டு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரின் மூளையில் ரத்தம் கட்டியிருந்ததால் அவருக்கு மூளையில் ஆபரேசன் செய்ய வேண்டிய நிலை இருந்தது. அதேபோல் இன்னொரு நோயாளிக்கு தலை வீங்கியிருந்ததால் அந்த வீக்கத்தை ஆபரேசன் செய்ய வேண்டியிருந்தது

இந்த நிலையில் மூளையில் ஆபரேசன் செய்ய வேண்டிய நோயாளிக்கு பதில் தலைவீக்கம் உள்ள நோயாளிக்கு டாக்டர் மூளையில் ஆபரேசன் செய்துள்ளார். இதனால் அந்த நோயாளி கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து மருத்துவர், நர்ஸ்கள் மருத்துவமனையின் தலைவர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து மேலும் விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply