மூல நோயை குணமாக்கும் குதபாத ஆசனம்

விரிப்பின் மீது கால்களை நீட்டியபடி உட்கார்ந்து, பின் இரு பாதங்களையும் உள்பக்கமாக ஒட்டியபடி இணைக்கவும்.

இரு கைகளாலும் சேர்த்து கால்களை உள்பக்கமாக இழுத்து உடலை உயர்த்தி, கட்டை விரல் தெரிய கால்களில் மேல் சின் முத்திரையிட்டு வைக்கவும். ஆசனம் செய்யும் போது நமது சிந்தனையை முதுகுத்தண்டின் மீது செலுத்தவும் காலை, மாலை இரு வேளைகளிலும் செய்யலாம். 3 முதல் 5 முறை செய்ய வேண்டும்.

ஒவ்வொரு தடவையும் 30 விநாடிகள் செய்வது நலம். முதுகு தண்டில் பிரச்சனை உள்ளவர்கள், வயிறு கோளாறு உள்ளவர்கள், முதுகில் அறுவை சிகிச்சை செய்தவர்கள்

இந்த ஆசனத்தை செய்யக்கூடாது. பலன் :

ஆண்மைக்குறைவு, ஆண்மலடு நீங்கி பெரிதும் பலனளிக்கும். உடல் உஷ்ணம் நீங்கி, மன உளைச்சல்கள் நீங்கும். யானைக்கால் விரைவில் குணமாகும். பெண்கள் மாதவிடாய் நாட்களில் 5 நாட்களும், கருவுற்ற காலங்களிலும் செய்யக்கூடாது. முதுகு வலியை குணமாக்கும்.

தொப்பையை குறைக்கும். கைகள், கால்களுக்கு வலிமை தரும். அடிவயிற்று தொந்தரவுகள் நீங்கும். ஆசன வாய் பகுதியில் வரும் பாதிப்புகள், வலி, கட்டி, மூல நோயை குணமாக்கும் ஆசனம் இது. மலச்சிக்கலையும் போக்கும்.