மூலப்பத்திரம் எங்கப்பா? கோல களத்தில் குதித்த பாஜக!

மூலப்பத்திரம் எங்கப்பா? கோல களத்தில் குதித்த பாஜக!

கடந்த சில நாட்களாக திமுகவினர் தங்கள் வீடுகளின் முன்னால் குடியுரிமை சீர்திருத்த சட்டத்துக்கு எதிரான கோலங்களை போட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த கோலங்களின் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகிய நிலையில் தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவினரும் கோலம் போட ஆரம்பித்துவிட்டனர்

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுகவினர் கோலம் போட்டு வரும் நிலையில் ’மூலப்பத்திரம் எங்கே’ என்ற கேள்வியை எழுப்பி திமுகவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜகவினர் தங்கள் வீடுகளின் வாசலில் கோலம் போட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

உலகிலேயே கோலத்தை வைத்து அரசியல் செய்வது தமிழகத்தில் மட்டுமாகத்தான் இருக்கும் என நெட்டிசன்கள் இதுகுறித்து கிண்டலடித்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.