மூன்று வேடமும் இல்லை, வேற்றுகிரக மனிதரும் இல்லை: அயலான் தயாரிப்பாளர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒன்று வேற்றுகிரக மனிதர் என்றும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த படத்தின் தயாரிப்பாளர் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மூன்று வேடமும் இல்லை, வேற்றுகிரக மனிதரும் இல்லை என்றும் இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை படம் என்றும் ரஜினி முருகன்’ படம் போல் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் காமெடி படம் தான் இது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை படக்குழு உறுதி செய்யவில்லை.

Leave a Reply