மூன்று மொழிகளில் காதலிக்கும் ஹரிஷ்-ரைசா

மூன்று மொழிகளில் காதலிக்கும் ஹரிஷ்-ரைசா

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் அனைவருமே சினிமா மற்றும் தொலைக்காட்சி வாய்ப்புகள் பெற்று நல்ல நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் ஹரிஷ் மற்றும் ரைசா ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக வெளிவந்த செய்தி ஏற்கனவே வெளிவந்தது

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ‘பியார் பிரேமா காதல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது

‘பாகுபலி 2’ படத்தை வெளியிட்ட கே புரொடக்‌ஷ்ன்ஸ் ராஜராஜன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர்ராஜாவின் YSR பிலிம்ஸ்( பி) லிட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை இளன் இயக்குகிறார். யுவன்ஷங்கர் ராஜா இசையில், ராஜா பட்டாச்சார்யா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகவுள்ளது.

இந்த படம் குறித்து இயக்குனர் இளன் கூறியதாவது: உலக அளவில் மாபெரும் வெற்றிபெற்ற படங்கள் அனைத்துமே காதலை அழகாகவும் அழுத்தமாகவும் சொல்லப்பட்ட படங்கள்தான். அந்தப் படங்களில் இசையும் மக்களை தியேட்டருக்கு இழுத்த முக்கிய காரணமாக இருந்திருக்கிறது. அந்த பார்முலாவில் உருவாகும் படமே ‘பியார் பிரேமா காதல்’. காதலை இந்தியில் பியார் என்றும் தெலுங்கில் பிரேமா என்றும் தமிழில் காதல் என்றும் டைட்டில் வைத்திருக்கிறோம்” என்று கூறினார்

 

Leave a Reply