shadow

மூன்றாவது அணி மும்முரம்: பாஜகவுக்கு பயன் கிடைக்குமா?

காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரளாமல் மூன்றாவது அணி என்று ஒன்று உருவானால் அது பாஜகவுக்கு மிகப்பெரிய பலம் என்று கூறப்படுகிறது.

ஐந்து மாநில தேர்தலுக்கு பின் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கொண்டிருந்த நேரத்தில் ஸ்டாலினின் பிரதமர் அறிவிப்பால் தற்போது 3வது அணி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கான பணியை ஏற்கனவே தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தொடங்கிவிட்டார்.

தன்னுடைய மகன் ராமாராவை மாநில அரசியலில் நுழைத்த சநதிரசேகரராவ், தான் தேசிய அரசியலில் நுழையும் வகையில் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். ஒடிஷா முதல்வர், மேற்கு வங்க முதல்வரை சந்தித்து முடித்துவிட்ட சந்திரசேகரராவ், தற்போது மேலும் சில முதல்வர்களையும் எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

மம்தா, மாயாவதி, அகிலேஷ் உள்ளிட்டோர் காங்கிரஸ் உடனான கூட்டணியை இன்னும் உறுதி செய்யாத நிலையில், அதனை தனக்கு சாதகமாக்க புதிய முயற்சியை தொடங்கியுள்ளா சந்திரசேகர் ராவ் அவர்களுக்கு வெற்றி கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

 

Leave a Reply