shadow

மு.க.ஸ்டாலின் – சோனியா காந்தி சந்திப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை டெல்லி பயணம் செய்து சோனியா காந்தியை சந்திக்கவுள்ளார். நாளை டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெறும் இந்த சந்திப்பின்போது கருணாநிதி உருவ சிலை திறப்பு விழாவில் பங்கேற்க நேரில் அழைப்பு கொடுக்கவுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் சிலை வரும் 16ஆம் தேதி திறக்கவுள்ள நிலையில் இந்த விழாவிற்கு அழைப்பிதழ் கொடுக்கும் பணியை மு.க.ஸ்டாலின் தொடங்கிவிட்டார். அந்த வகையில் நாளை சோனியா காந்திக்கு அழைப்பு கொடுக்கும் ஸ்டாலின், அதன்பின் டெல்லியில் ஒருசில தேசிய தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.

அதன்பின் தமிழகம் திரும்பி ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *