முறைகேடு என்றால் புகார் கொடுக்காமல் சங்கத்தை பூட்டுவீர்களா? நீதிபதி அதிரடி கேள்வி

முறைகேடு என்றால் புகார் கொடுக்காமல் சங்கத்தை பூட்டுவீர்களா? நீதிபதி அதிரடி கேள்வி

சென்னை தி.நகரில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

145 பிரிவை கையாண்டது எப்படி?; இதில் போலீஸ் தலையிட என்ன முகாந்திரம் உள்ளது. எந்த இரு பிரிவுகள் மோதிக்கொண்டாலும் பிரிவு 145ஐ அமல்படுத்துவீர்களா? என போலீசுக்கு நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.

சங்க பிரச்னையை நீதிமன்றத்தை அணுகி அவர்கள் தீர்த்துக் கொள்ளட்டும், போலீஸ் ஏன் தலையிடுகிறது என நீதிபதி கேள்வி எழுப்பியதோடு, சங்கத்திற்கு பூட்டு போட்டது தவறு என்றும், அதிருப்தி தயாரிப்பாளர் தரப்புக்கு நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.

மேலும் விஷால் முறைகேடு செய்தார் என்றால் புகார் கொடுக்காமல் சங்கத்தை பூட்டுவீர்களா?: என்று நீதிபதி காட்டமாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.