மும்பையில் மீண்டும் வெள்ளம்; பொதுமக்கள் அவதி

கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் கனமழை பெய்ததால் நகரம் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சி அளித்த நிலையில் தற்போது மீண்டும் மும்பையில் கனமழை பெய்து தெருக்களில் வெள்ள நீர் வழிந்தோடுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்

நேற்று மாலை ஒரே மணி நேரத்தில் சுமார் 12 செமீ அளவுக்கு மழை பெய்ததாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மும்பையின் முக்கிய பகுதிகளான கோரேகான், அந்தேரி, பாந்த்ரா, சயான், மாடுங்கா போன்ற பகுதிகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் ரயில் தண்டவாளங்களும் மழைநீரால் மூடப்பட்டுள்ளதால் ஒரு சில மார்க்கத்தில் ரயில் நிறுத்தப்பட்டு உள்ளது

இந்த நிலையில் மும்பையின் பல பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது

Leave a Reply