முப்பது நாட்களில் முடிவடையும் தனுஷின் அடுத்த படம்

முப்பது நாட்களில் முடிவடையும் தனுஷின் அடுத்த படம்

நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ஒரு படத்தில் நடித்து கொண்டிருக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் ஒரே ஷெட்யூலில் முப்பதே நாட்களில் முடிக்க கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளார்

தனுஷ், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தை தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரித்து வருகிறார். இந்த படம் ஒரு கேங்க்ஸ்டர் படம் என்றும் இந்திய கேங்க்ஸ்டரான தனுஷ், ஐரோப்பிய கேங்க்ஸ்டர்களுடன் மோதும் வகையில் விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

ஏற்கனவே தனுஷ், புதுப்பேட்டை, வடசென்னை போன்ற ஒருசில கேங்க்ஸ்டர் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply