shadow

முன்பதிவில் நல்ல வரவேற்பை பெறும் ஜீப் காம்பஸ்

இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாடு முழுக்க முன்பதிவுகள் துவங்கியுள்ள நிலையில், இதுவரை சுமார் 8,171 யுனிட்களை முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவன தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மொத்த மதிப்பு 245 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.1,570 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

ஜீப் காம்பஸ் இந்திய விலை ரூ.14.39 லட்சத்தில் துவங்குகிறது. இதன் டாப் என்ட் மாடலின் விலை ரூ.20.65 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. மொத்தம் மூன்று மாடல்கள், – ஸ்போர்ட், லாங்கிடியூட் மற்றும் லிமிட்டெட் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஜீப் காம்பஸ் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது. பிரீமியம் கிராண்ட் செரோக்கீ எஸ்.யு.வி. வகை ஸ்டைலிங் கொண்டுள்ள ஜீப் காம்பஸ் பாரம்பரிய ஜீப் வடிவமைப்பு மற்றும் அனைவருக்கும் பிடித்தமான மாடலாக அமைந்துள்ளது. புதிய ஜீப் கிரில், வீல் ஆர்ச் மற்றும் எல்இடி புதிய மாடலில் அனைவரையும் கவரும் வகையில் உள்ளது.

இந்த எஸ்.யு.வி. மாடலில் ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி DRL மற்றும் எல்இடி ஹெட்லேம்ப்களை மற்றும் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்பட்டுள்ளது. அலாய் வீல் வடிவமைப்பு கவர்ச்சியாக இருப்பதோடு பெயின்ட் ஆப்ஷன்கள் வாடிக்கையாளர்களுக்கு ஐந்து வித நிறங்களில் தங்களுக்கு பிடித்தமான நிறத்தை தேர்வு செய்யும் வசதியை வழங்குகிறது. ஜீப் காம்பஸ் எஸ்.யு.வி. மினிமல் கிரே, எக்சாட்டிக்கா ரெட், ஹைட்ரோ புளூ, வோகல் வைட் மற்றும் ஹிப் ஹாப் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.

ஏற்கனவே திட்டமிட்டதை விட 25 சதவிகிதம் அதிகளவு கார்கள் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது. தற்சமயம் தினமும் 90 ஜீப் காம்பஸ் மாடல்கள் தயாரிக்கப்படும் நிலையில், இந்த எண்ணிக்கை 110-ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய ஜீப் காம்பஸ் மாடல் கார்கள் பூனேவில் சமீபத்தில் துவங்கப்பட்ட தயாரிப்பு ஆலையில் நடைபெற்று வருகிறது.

Leave a Reply