முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்த நிலையில் இந்த ஊழல் வழக்கில் சற்றுமுன் தீர்ப்பு வழங்கப்பட்டது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு இந்த தண்டனையை தேசிய பொறுப்பான்மை நீதிமன்றம் அளித்துள்ளது. மேலும் நவாஸ் ஷெரீப்புக்கு 17 கோடி ரூபாய் அளவுக்கு அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது

நவாஸ் ஷெரிப் ஊழல் பணத்தில் லண்டனில் சொத்து வாங்கி குவித்ததாக நவாஸ் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply