முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூரில் கைது!

கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூரில் சற்றுமுன் கைது செய்யப்பட்டார்.

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை சாந்தினி பாலியல் புகார் ஒன்றை கூறியதை அடுத்து, அவர் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் மணிகண்டன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அமைச்சர் மணிகண்டன் பெங்களூரில் இருப்பதாக இரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து தனிப்படை போலீசார் பெங்களூர் சென்று அவரை கைது செய்தனர். மணிகண்டனை இன்று நீதிமன்றத்தில் காவல்துறையினர் செய்வார்கள் என்று கூறப்படுகிறது.