முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி நண்பர் வீட்டிலும் ஐடி ரெய்டு

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி நண்பர் வீட்டிலும் ஐடி ரெய்டு

முன்னாள் திமுக அமைச்சர் துரைமுருகன் வீட்டில் நேற்று நள்ளிரவு முதல் சுமார் ஐந்தரை மணி நேரம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களை கொண்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் ஓசூரில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் நண்பர் வீட்டிலும் தற்போது வருமானவரித் துறை சோதனை செய்து வருகின்றனர்.

ரெயின்போ கார்டனில் உள்ள பாலகிருஷ்ண ரெட்டியின் நண்பரும் தொழிலதிபருமான மதியழகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அம்மா குடிநீர் விநியோகம் தொடர்பான ஒப்பந்தங்களை மதியழகன் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply