shadow

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த வருமான வரி சோதனை காரணமாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் வீட்டின் முன் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளதாகவும், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.

இந்த வருமான வரி சோதனை முடிவில் அவருடைய வீட்டில் இருந்து பொருட்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டதா? என்பது குறித்த தகவல்களை வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.