முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டும் தேர்தல் வாக்குறுதிதான்: அமைச்சர் சாமிநாதன்

முன்னாள் அமைச்சர் வேலுமணி வீட்டில் நேற்று திடீரென லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை செய்த நிலையில் இதுவும் தேர்தல் வாக்குறுதி தான் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்

திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று முறைகேடாக அரசு பணத்தை செலவு செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது அந்த வகையில் தான் தற்போது எஸ் பி வேலுமணி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இதுவும் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று என்றும் அமைச்சர் சாமிநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார்

அவருடைய இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது