முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் சோதனை!

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி வீட்டில் வருமான வரித் துறையினர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீரென சோதனை செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் முக்கிய அமைச்சராக இருந்தவர் எஸ் பி வேலுமணி என்பது தெரிந்ததே. இவர் மீது ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர்

இந்த சோதனையில் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது. முன்னாள் அமைச்சர் வேலுமணி என் வீட்டில் சோதனை என்ற தகவல் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது வீட்டின் மேல் நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் குவிந்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்