முதுகெலும்பு இல்லாத நத்தை! கமல்ஹாசனை காட்டமாக விமர்சனம் செய்த எச்.ராஜா

முதுகெலும்பு இல்லாத நத்தை! கமல்ஹாசனை காட்டமாக விமர்சனம் செய்த எச்.ராஜா

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை விமர்சனம் செய்யாத அரசியல் கட்சியே இல்லை எனலாம். அதிமுக, திமுக, பாஜக என அனைத்து கட்சிகளும் விமர்சனம் செய்துவிட்ட நிலையில் தற்போது பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா ஆகியோர் விமர்சனம் செய்துள்ளனர்.

பொன்.ராதாகிருஷ்ணன், கமல்ஹாசன் கட்சிக்கு கிடைத்த டார்ச்லைட் சின்னம் குறித்து கூறியபோது, ‘”பேட்டரி லைட் கொடுத்திருக்கிறார்கள். அதனை வைத்தாவது கட்சியை கண்டுபிடிக்கட்டும்’ என்று கூறினார்

இதனையடுத்து எச்.ராஜா தனது டுவிட்டரில், ‘விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய தீவிரவாதிகள் எதிப்பு தெரிவித்த போது பணத்திற்காக பிழைப்பிற்காக அழுது புலம்பி மண்டியிட்டு வெட்டுக்களை ஏற்ற முதுகெலும்பு இல்லாத நத்தை நாடாளும் பாஜகவை நக்கலடிப்பது வேடிக்கையாக உள்ளது. தேர்தலுக்குப் பிறகு இவரை தேட வேண்டியிருக்கும்” எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply