முதியோர்கள், கர்ப்பிணிகள் அத்திவரதரை பார்க்க வரவேண்டாம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

முதியோர்கள், கர்ப்பிணிகள் அத்திவரதரை பார்க்க வரவேண்டாம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதரை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து கொண்டிருப்பதால் காஞ்சிபுரம் நகரமே நெருக்கடியில் தவித்து வருகிறது. இந்த நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன

இதனை அடுத்து காஞ்சிபுரம் அத்தி வரதர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதால் முதியோர்கள் உடல் நலம் குன்றியோர் கர்ப்பிணிகள் பச்சிளம் குழந்தைகள் ஆகியோரை அழைத்து வருவோர் கோவிலுக்கு வருவதை கூடுமானவரை தவிர்த்து விடுமாறு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இந்த வேண்டுகோளை ஏற்று பொதுமக்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களை கோவிலுக்கு அழைத்து வர வேண்டாம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்

Leave a Reply