முதல் முறையாக ரஜினி படத்தில் அஜித்: ஒரு ஆச்சரிய தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ’அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தை தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக அஜித்தின் படத்தையும் தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

இந்நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி ’அண்ணாத்த’ படத்தில் ஒரு சிறு கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் அஜித் நடிக்க இருப்பதாகவும், அவருக்கு நெருக்கமான சிறுத்தை சிவா கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த அதிசயம் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

இப்படி ஒரு அதிசயம் நடந்தால் ரஜினி-அஜித் முதன்முதலாக திரையில் தோன்றுவதை இரு தரப்பு ரசிகர்களும் பார்க்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ரஜினி, அஜித் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மோதிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த இணைப்பு இருதரப்பு ரசிகர்களையும் சமாதானப்படுத்தும் என தெரிகிறது

Leave a Reply