முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல் பேசிய வழக்கில் முக்கிய உத்தரவு

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என கமல் பேசியதற்கு எதிரான வழக்கு வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்து டெல்லி பட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

இந்து சேனா அமைப்பை சேர்ந்த விஷ்ணுகுப்தாவின் வழக்கை டெல்லி பட்டியாலா நீதிமன்றம் இன்று விசாரணை செய்த நிலையில் இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

முன்னதாக கடந்த மக்களவை தேர்தலின்போது தேர்தல் பிரச்சாரம் செய்த கமல்ஹாசன், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும் அவர்தான் கோட்சே’ என்றும் பேசியிருந்தார். அவருடைய இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply