முதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வியால் ரசிகர்கள் அதிருப்தி!

முதல் டெஸ்ட்: இந்தியா படுதோல்வியால் ரசிகர்கள் அதிருப்தி!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே கடந்த 21ஆம் தேதி தொடங்கிய முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்துள்ளது

சற்றுமுன் முடிந்த இந்த போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

நியூசிலாந்து அணி டாஸ் வென்றதை அடுத்து இந்தியாவை பேட்டிங் செய்ய கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் இந்திய அணி களமிறங்கி முதல் இன்னிங்சில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனை அடுத்து விளையாடிய நியூசிலாந்து அணி 348 ரன்கள் குவித்தது. அதன்பின்னர் 191 ரன்கள் மட்டுமே இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் எடுத்ததால் நியூசிலாந்து அணிக்கு வெற்றி பெற 9 ரன்கள் மட்டுமே இலக்கு நிர்ணயிக்கப்பட்டது

இதனையடுத்து அந்த அணி மிக எளிதில் வெற்றிக்கு தேவையான 9 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது இதன் மூலம் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் படுதோல்வி கிரிக்கெட் ரசிகர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

ஸ்கோர் விபரம்

இந்தியா முதல் இன்னிங்ஸ் 165/10

ரஹானே: 46
மயாங்க் அகர்வால்: 34
முகம்மது ஷமி: 21
ரிஷப் பண்ட்: 19

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸ்: 348/10

வில்லியம்சன்: 89
டெய்லர்: 44
ஜேமிசன்: 44
கிராந்தோம்: 43

இந்தியா 2வது இன்னிங்ஸ்: 191/10

மயாங்க் அகர்வால்: 58
ரஹானே: 29
ரிஷப் பண்ட்: 25
விராத் கோஹ்லி: 19

நியூசிலாந்து 2வது இன்னிங்ஸ்: 9/0

லாதம்: 7
பிளண்டல்: 2

ஆட்டநாயகன்: ஜேமிசன்

Leave a Reply

Your email address will not be published.