முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி: சொந்த மண்ணில் நியூசிலாந்து பரிதாபம்

முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி: சொந்த மண்ணில் நியூசிலாந்து பரிதாபம்

ஆஸ்திரேலியா அணியை அதன் சொந்த மண்ணிலேயே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை வென்ற நிலையில் இன்று நியூசிலாந்து அணிக்கு எதிராக முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி விளையாடியது.

இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 38 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. குல்திப் யாதவ் 4 விக்கெட்டுக்களையும் ஷமி 3 விக்கெட்டுக்களிஅயும், சாஹல் 2 விக்கெட்டுக்களையும், ஜாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்த நிலையில் 158 என்ற எளிய இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடிபோது சில நிமிடங்கள் சூரிய ஒளி காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்டதால் 49 ஓவர்களில் 156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு வழங்கப்பட்டது. இதில் இந்திய அணி 34.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து 156 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தவான் 75 ரன்களும், கோஹ்லி 45 ரன்களும் எடுத்தனர். ஷமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published.