முதல்வர் வெளிநாட்டு பயணத்தால் யாருக்கு நன்மை? முக ஸ்டாலின் கேள்வி

தமிழக முதல்வர் தொழிலதிபர்களை சந்தித்து முதலீட்டை அதிகரிக்க விரைவில் வெளிநாடுகள் செல்லவுள்ள நிலையில் முதல்வர் வெளிநாட்டு பயணத்தால் என்ன நன்மை? என திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பேசிய ஸ்டாலின், முதலமைச்சர் பழனிசாமியின் வெளிநாட்டு பயணம் தேவைதானா? என்றும், இந்த பயணத்தால் தமிழ்நாட்டிற்கு ஏதேனும் பயன் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் ஜம்மு-காஷ்மீர் மக்களின் கருதுக்களை கேட்காமல், அங்கு 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டிருப்பதாகவும், அது சர்வாதிகாரத்தோடு நடந்திருப்பதாகவும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். அதே நேரத்தில் 370 பிரிவை நீக்கியது தவறு என்று திமுக எம்பிக்கள் போராடவில்லை என்றும் நீக்கிய விதம் தான் தவறு என்று போராடியதாகவும் அவர் கூறினார்.

 

Leave a Reply