முதல்வர் பழனிச்சாமி வீட்டில் பாதுகாப்பு பணியிலிருந்த பெண் காவலருக்கு கொரோனா

அதிர்ச்சி தகவல்

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டு பாதுகாப்பு பிரிவில் பணிபுரிந்து வந்த பாதுகாப்பு பிரிவு பெண் காவலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பே விடுமுறையில் இந்த பெண் காவலர் சென்றிருந்ததாகவும், தற்போது அந்த பெண் காவலருக்கு மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதனையடுத்து இந்த பெண் காவலர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

முதல்வர் வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கே கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply