முதல்வர் பழனிச்சாமியிடம் நிவாரண நிதி கொடுத்த துணை முதல்வர் ஓபிஎஸ்

முதல்வர் பழனிச்சாமியிடம் நிவாரண நிதி கொடுத்த துணை முதல்வர் ஓபிஎஸ்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அதிமுக கட்சி சார்பில் கஜா பொது நிவாரண நிதியாக ரூ.1 கோடியை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அளித்தார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவியில் உள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கஜா புயல் நிவாரண நிதியாக அதிமுக சார்பில் ரூ.1 கோடி அளிக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த தொகையை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேற்று வழங்கினார்.

மேலும் இன்று ஒரே நாளில் கஜா புயல் நிவாரணமாக 10 கோடியே 68 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளதாகவும், மொத்தம் இதுவரை 33 கோடியே 66 லட்சத்து 80 ஆயிரத்து 583 ரூபாய் கிடைத்துள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply