முதல்வரை சந்திக்கும் திட்டமில்லை: நீக்கப்பட்ட அமைச்சர் மணிகண்டன் தகவல்

முதல்வரை சந்திக்கும் திட்டமில்லை: நீக்கப்பட்ட அமைச்சர் மணிகண்டன் தகவல்

தமிழக அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டன் நேற்று இரவு அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில் முதல்வரை சந்திக்கும் திட்டமில்லை என மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டனை விடுவித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று இரவு உத்தரவிட்டார். முதல்வர் பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று இந்த உத்தரவு பிறக்கப்பட்டது. அரசு கேபிள் தொடர்பாக உடுமலை ராதாகிருஷ்ணனை விமர்சித்ததால் மணிகண்டன் அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றது

இந்த நிலையில், மதுரையில் இருந்து சென்னைக்கு புறப்பட்ட போது செய்தியாளர்களிடம் பேசிய மணிகண்டன், முதல்வரை சந்திக்கும் திட்டமில்லை என தெரிவித்தார். இந்த நிலையில் இதுகுறித்து கருத்து கூறிய அமைச்சர் ஜெயகுமார், அமைச்சராக இருந்த மணிகண்டனை நீக்குவது முதல்வரின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று தெரிவித்தார்

Leave a Reply