முதல்வருக்கு சீமான் நன்றி: விட்டா கூட்டணியே வச்சுடுவார் போல் இருக்கு?

முதல்வருக்கு சீமான் நன்றி: விட்டா கூட்டணியே வச்சுடுவார் போல் இருக்கு?

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து ஒரு சில கோரிக்கைகளை முன்வைத்தார். இந்த நிலையில் முதல்வர் பழனிசாமியை சீமான் சந்தித்தபோது சீமான் வலியுறுத்திய கோரிக்கைகளில் ஒன்று டெல்டாப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதுதான்

இந்த நிலையில் சீமான் வலியுறுத்திய கோரிக்கையை இரண்டே நாட்களில் முதல்வர் நிறைவேற்றி விட்டார். ஆம் இன்று தமிழக முதல்வர் டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் பகுதி என அறிவித்தார். விரைவில் இதுகுறித்த சட்டம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படவுள்ளது.

இதனை அடுத்து தமிழக முதல்வருக்கு சினிமா நன்றி தெரிவித்துள்ளார் இரண்டு நாட்களுக்கு முன்னர் தான் முதல்வரை சந்தித்தபோது வைத்த கோரிக்கைகளில் முதன்மையானது டெல்டா பகுதியில் வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதுதான். அந்த கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வருக்கு நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார்

Leave a Reply