முதல்வருக்கு சபரிமலை ஐயப்பன் நல்ல ஞானத்தை தர வேண்டும்: இல.கணேசன்

முதல்வருக்கு சபரிமலை ஐயப்பன் நல்ல ஞானத்தை தர வேண்டும்: இல.கணேசன்

சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்களை பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். சபரிமலைக்கு மாலை போட்டு கோவிலுக்கு சென்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கனவே முதல்வர் பினரயி விஜயனை குறைகூறிய நிலையில் தற்போது பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் அவர்களும் விமர்சனம் செய்துள்ளார்.

சென்னையில் சபரிமலை பாதுகாப்பு இயக்கத்தின் போராட்டத்தில் கலந்து கொண்ட இல.கணேசன் பின்னர் கூறியபோது, ‘”கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு சபரிமலை ஐயப்பன் நல்ல ஞானத்தை தர வேண்டும்!” என்று கூறினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply